Archive for செப்டம்பர் 2016

ஒயில் குமியும் நானும்

செவ்வாய், 20 செப்டம்பர், 2016 · Posted in

ஒயில் கும்மி

தொழில்நுட்ப வளர்ச்சி,மேல்நாட்டுக் கலாச்சாரம் இவற்றின் மேல் பற்றுக்கொண்டு, மற்றவர்களைப்போல் நாமும் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் நம்மை தாலாட்டி சீராட்டி வளர்த்த நமது கிராமங்களை துறந்து இன்று நகர (நரக) வாழ்க்கையில் நம்மை பாழ்படுத்திக் கொண்டிருகும் இக் கனத்தில் என்னையே எனக்கு நினைவு படுத்திய அந்த கிராமியக்கலையைப் பற்றி உங்களோடு பகிர்ந்துக்கொள்கின்றேன் வாருங்கள்.


ஓர் கடற்கரை தீவு கிராமம்  மறக்கவும் மறுக்கவும் முடியாதளவிற்கு சில நல்ல மனிதர்களை நமக்கு அறிமுகம் செய்த அந்த ஊர்.  இந்து மதத்தை பின்பற்றும் ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய கோவிலை கொண்டுள்ளதும் அந்த ஊர்தான் ஆம்! நான் கூறுவது நாம் அனைவரும் அறிந்த "இராமேஸ்வரம்".     


தமிழகத்தில்  ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கலாச்சாரம் பின்பற்றபடுகிறது அதில் விளையாடு, கோவில் திருவிழாக்கள்,பேச்சு வழக்குகள் போன்றவை
மாறுபடுகின்றன ஆனால் இவற்றை அனைத்தையும் நம்மால் காணமுடிவதில்லை அதுபோலத்தான் இந்த ஊரில் உள்ள அம்மன் கோவில்களில் நடக்கும் முளைப்பாரி என்கின்ற நிகழ்ச்சியில் "ஒயில் கும்மி
" என்ற நாடுப்புற கலையை  காணமுடிந்தது.



இந்த நிகழ்ச்சி இரவு பத்து மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணிவரை நடக்கிறது இதில் நல்ல இனிமையான இசையை தரக்கூடிய கிராமியக்கலைகே உரித்தான சில வாத்தியங்களை பயன்படுத்திகின்றனர்.

கடற்கரை மணலில் இரவு நேர காற்றில் இந்த கிராமத்து மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அந்த கிராமிய பாடலோடுகூடிய இசைக்கு நடனமாடி அந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும்
விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

எவ்வளவுதான் நாகரிகங்கள் வளர்ந்தாலும் தன் மண்ணையும் தன் பரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்காமல் இன்றளவும் இதை பாதுகாக்கும் இவ்வூர் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.










Blogger இயக்குவது.

தொடர்பு கொள்ள

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *