என்னைப் பற்றி:
தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி பகுதியான பேராவுரணி தான் என் சொந்த ஊர். காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதி என்பதால் வருடத்தில் பாதி நாள் பச்சை வர்ண கம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கும். எங்கு பார்த்தாலும் வயல்களும், குளங்களும், தென்னை மரங்களும் நிறைந்து காட்சியளிக்கும் ஓர் சிறிய கிராமம்.
இங்கு ஓர் நடுத்தர குடும்பத்தில் இரண்டு அண்ணன்களோடு பிறந்த கடைசி பையன், பிறப்பிலேயே கிராமத்து பின்னணியில் இருந்து வந்ததால் என்னவோ கல்வியில் கவணம் சற்று குறைவுதான்.
(காரணம் எனக்கு அன்று பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களும்கூட தங்கள் வீட்டில் தேங்காய் பிடுங்குவது, வயல் வேலை பார்ப்பது இப்படி
கல்வி கற்கும் காலத்தில் பல கலைகளை கற்றுக்கொடுத்தார்கள்.)
" இல்லனா மட்டும் அப்டியே படிச்சு கீச்சிருப்பாருனு நெனைகிரிங்க தானே என்று நீங்கள் நினைக்கலாம். சரி அப்டியே மேல போலாம் வாங்க."

இந்த வலைதளம் நான் பார்த்து ரசித்த இடங்களைப் பற்றியும் பழகிய நண்பர்களைப் பற்றியும், காதலைப்பற்றியும், காமத்தைப்பற்றியும் என்னால் சிந்திக்க முடிந்த அனைத்தையும் தரவுகளாக இங்கு பதிவிடுகின்றேன்..
தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு சமூக வலைத்தளங்கள்( instagram, snapchat, facebook) வந்தாலும். நான் இன்னும் பலரால் அறியப்படாத இந்த வலைத்தளத்தில் என் நினைவுகளை சேமிக்கின்றேன். உங்களுக்கு இந்த தளம் அறியப்பட வெகு காலம் எடுக்கலாம் அல்லது அறியப்படாமல் கூட போகலாம்..
எல்லோருக்கும் எந்த ஆரவாரமும் இல்லாத தனிமை ஒரு சில சமயங்களில் கிட்டும் அப்பொழுது விருப்பம் இருந்தால் வாசித்துப்பாருங்கள். மற்றவரின் சிந்தையை அறிவது சுவாரசியம் தானே !
இயற்க்கை இந்த உலகில் தற்பொழுது வரை நாம் வாழ ஒரு வாய்ப்பு தந்துள்ளது அவ்வளவுதான்.
நாம் கண்டு ரசித்த, வியந்த, தருணங்களை இயற்கையிடம் மாசுபடாமல் விட்டுவிட்டு செல்வது நமது கடமையாகும்.
ஓர் இயற்க்கை ஆர்வலனாய் உங்களோடு நானும் ஒருவனாய் ஆனந்தன் சதாசிவம்... நன்றி