Archive for 2017

மேல்முடி பயணம் .

புதன், 15 மார்ச், 2017 · Posted in


முகபுத்தகத்தில் நண்பர் ஒருவர் மேல்முடி செல்வது எப்படிஎன்று கேட்டுக்கொண்டதற்காக எனக்கு தெரிந்த சிலவற்றை கூறுகிறேன்.
தமிழகத்தில் கோயமுத்தூரில் டிரெக்கிங் செல்ல ஓர் சிறந்த இடங்களில் இந்த மேல்முடியும் ஒன்று. ஆம் இயற்கையின் உண்மையான அழகை தரிசிக்க விரும்பினால் ஒருமுறை சென்றுவாருங்கள்.
இந்த மேல்முடி பயணம் ஓர் நீண்ட நெடிய பயணம் முதலில் நீங்கள் செல்ல திட்டமிடுவது ஓர் குழுவாக இருப்பது நல்லது.
இந்த பயணம் கோயமுத்தூரில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து தொடங்குகின்றது (இதற்க்கு இன்னும் ஓர் வழி உள்ளது அது தடாகத்திளிருந்து தொடங்குகின்றது நீங்கள் பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து செல்வது சிறந்தது).
முதலில் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் நீங்கள் மேல்முடி செல்ல விரும்புவதாக கூறி அனுமதி பெறவேண்டும் (உங்கள் நன்மைக்காக).
அனுமதி கிடைத்தவுடன் உங்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் பெரியநாயக்கன் பாளையத்திலையே வாங்கிக்கொள்ளுங்கள்.
நீங்கள் செல்ல திட்டமிடுவது நண்பகல் 12 மணிக்கு அப்புறம் தொடங்கினால் மாலை 6 மணிக்கு மேல்முடிக்கு சென்றடைவீர்கள் (இது நாங்கள் சென்ற நேரம் அதனால் கூறுகின்றேன்).
மலையில் நீங்கள் செல்லும் பொழுது கொசுக்கள் அதிகம் கடிக்கும் அதனால் ஒடோமாஸ் வாங்கிக்கொள்ளுங்கள்.
சரியான வழித்தடங்கள் இல்லாததால் சில நேரங்களில் நீங்களே உருவாக்க வேண்டியதிருக்கும் அதனால் நல்ல கூர்மையான கத்தி கொண்டுசெல்வது நல்லது.
அதேபோல் அங்கு ஓர் இரவு தங்கவேண்டியதிற்கும் அதற்காக உணவுக்கு தேவையான பொருள்களை வாங்கி செல்வது உத்தமம் (அங்கு நீங்கள் சமைத்து சாப்பிடுமளவிற்கு தேவையான வசதிகள் உள்ளது ஆகையால் அரிசி,பருப்பு,காய்கறிகள் வாங்கி சென்றால் போதும்).
பின்னர் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலை மோசமாக இருக்கும் ஆகையால் உங்களை காத்துக்கொள்ள போர்வை, மெழுகுவர்த்தி, மற்றும் கை விளக்குகள் (torch light),வலி நிவாரணி போன்றவற்றை கொண்டு செல்லுங்கள்.
நீங்கள்இருசக்கர வாகனத்தில் சென்றால் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள காப்பகத்தில் உங்கள் வாகனங்களை விட்டுவிடுங்கள் பின்னர் அங்கிருந்து பாலமலைக்கு பேருந்து மற்றும் ஜீப் வசதி உள்ளது.
பேருந்தில் சென்றால் பாலமலை அடிவாரத்திற்கு சென்று விடுங்கள் அங்கு ஜீப் வசதி உள்ளது ஓடுநரிடம் மேல்முடி செல்கின்றோம் என்று கூருங்கள் அவர் ஓர் இடத்தில் உங்களை இறக்கிவிடுவார்
அங்கிருந்து உங்களது பயணம் தொடங்குகின்றது.
இதற்க்குமேல் உள்ள ஒவ்வொரு இடங்களையும் அனுபவித்து செல்லுங்கள். உங்களது பயணம் மேல்முடி கோவில்வரைக்குமே இந்த தகவல் உதவும் மேல்முடிக்கும் மேலே ஓர் சொர்க்கம் உள்ளது அதற்க்கு சரியான வழிகாட்டி இருந்தால் மட்டும் மட்டுமே தொடருங்கள் .
(வழிகாட்டி இல்லையேல் தவிர்த்து விடுங்கள் அது உங்கள் உயிருக்கும் ஆபத்து).
உங்களது பயணம் சிறக்க எனது வாழ்த்துக்கள்.
நன்றி
இவன்
ஆனந்த் சதாசிவம்

Blogger இயக்குவது.

தொடர்பு கொள்ள

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *